காதலை காதல் செய்த நேரம் 😍❤️😍


சில இடைவெளிக்குப் பிறகு 
பேருந்து இடையில் தேடி 
கை நீட்டி அழைத்து பிடித்து 
விரல் இடையில் அனைத்துக்கொண்டேன்


இடை இடையே அவனிடம் 
இடறி விழுந்த பார்வைகளை 
இமை திறந்து ரசித்திருந்தேன்
இடம் மறந்து சிரித்து கொண்டேன் 


சந்தனம் குங்குமத்திற்க்கு 
இடம் கொடுக்காமல்
அவன் கையிலிருந்த திருநீறு 
என் நெற்றிக்கு முந்தி கொண்டது 


அவன் கொடுத்த வாழையை
ஊட்டும் பொழுது பழத்தை விட 
அவன் கைகளே இனித்தது 
அதை என் பசியும் ருசித்தது. 


பெயர் தெரியா பூ மொட்டுக்கள்
வாசனையின்றி கூடாரமாய் கூடி 
அவன் வாங்கி கொடுத்ததால்
கூந்தலில் சிக்கிக்கொண்டது


நுணுக்கமான செய்கை கவனிப்புகள் 
இம்முறை கொஞ்சம் 
கூடுதலாக அசைவுகள் தந்து 
அவனில் சேர்த்து கொண்டது 


சிணுங்கி விலக காத்திருந்த
முத்தங்கள் எல்லாம் 
வாய்புகள் கிடைக்காமல் 
விரலில் எச்சில் இட்டு கொண்டது 


முத்தங்கள் இல்லையென்றதால்
தோள் சாய்ந்து இருவருக்குள்ளும் 
சிந்தனை யுத்தகள் நிகழ்ந்தது 
சிறப்புகள் நிறைந்தப்படி


உதடுகள் ஒட்டி கடித்ததை விட 
அவன் தாடியும் என் தாடையும்
உரசி கொடுத்த முத்தம் ஏராளம் 
கூடலின்றி உடல்கள் செய்த
வேலை தாராளம் 


காதல் சேர்த்த கவிதைகளை 
களவாடிய சிரிப்புகளில்
சிறகுகளில்லாமல் பறந்தது 
இன்று இருகாதல் பறவைகள் 

Comments