அவன் காதல்

காலில் அமர்ந்து பாதம் அணைத்தான்... 

விரல்நுனி தடவி முகத்தில் புதைத்தான்...

சிறு சிறு பேச்சில் இதழை இசைதான்...


இசைத்து இமைக்கையில் இமைமூட செய்தான்... 

மென்வருடல் நிகழ்த்தி பொன்வருடல் இட்டான்... 


தொடங்கி முடியவே மோகம் கொண்டான் 

பெருமூச்சு விட்டு விழிதிறக்க நின்றேன்


விசித்திரம் அறிய விலகி ரசித்தான்...

விதம் புரிந்தே சில விவரம் காட்டி... 


விதவித தோரணம் பூசி சிரித்தான்... 


தேங்கிய நிலவை தோழில் மாட்டி

இரவை காட்ட முயன்றான்.. 


கட்டிக்கொள்ள அழைத்தான்... 

கட்டிக்கொண்டு அணைத்தான்... 


இவை தான் காதல் என்றான் 

அவன்... 

அவன் தான் காதல் என்றேன்... 

நான் 


Comments