அழுகிய உணர்வுகள் 💓

அழுகிய உணர்வுகள் 💓 

காற்றின் வழியே கடந்து  

வாடையில் வீசும் 

துர்நாற்றத்தில்

என்னாசைகள் கலந்து 

போக வேண்டும் 


தெரு ஓரம்  வீசப்பட்ட 

குப்பைகள் போல  

என் எண்ணங்கள் 

கிழிந்து அலைய வேண்டும் 


மணல் புழுதி நுழைந்து 

மூச்சுமுட்டி திணறி மடியும்

நிலையில் தனிமையை 

அனுபவிக்கும் வேண்டும் 


இரவுகளில் தனிமை கனவை 

கையில் மாட்டி 

நினைவின் கம்பியில் கட்டி 

என் உள்ளத்தை 

கீறி ஏறிய வேண்டும் 


என் எண்ணங்கள் 

உள்ளுக்குள் புளுகி 

மக்கி போய் 

ஆழமான நிலையில் 

என்னுள் அமைதியாக 

சாக வேண்டும் 


இனியும் வேண்டாம்

இவ்வுலகம் என 

என்நிலை அறிந்து 

என்னுயிரும் என்னை 

மாய்த்துக்கொள்ள 

வேண்டும் 


Comments